நீர் வளையத்துள் அமிழும் ஒரு கொக்கின் தாகம் – வி.யோகேஷ்





அளந்திட முடிவதில்லை
இந்த அலைக்கும்
அடுத்த அலைக்குமிடையே
கிளர்கின்ற கரை தொடும் வேட்கையை
 
இந்தப் பிரிவிற்கும்
அடுத்த சந்திப்பிற்குமிடையே
உறையத் தொடங்குகின்ற
மௌனத்தின் கனத்தை
 
குளப்பரப்பில் அலகு பதிக்க
நீர் வளையத்துள் அமிழும்
ஒரு கொக்கின் தாகத்தை
 
கை குலுக்கலுக்கும்
புன்னகைக்குமிடையே
சாணையிடப்படும்
துரோகத்தின் கூர்மையை
 
மழையாகாது
வானிற்கும் நிலத்திற்குமிடையே
அலைவுறும் முகிற்கூட்ட நீட்சியை