நம்பர் 1 - பா.சரவணன்

zero by augenweide

ஒருவர் மட்டுமே அடைய முடியும்
என்றாலும்
எல்லோரும் விரட்டுகின்றனர்
ஒன்றை

இத்தனை பேர் விரட்டுவதைக் கண்டு
தானும் தறிகெட்டு ஓடும்
ஒன்றைப் பார்த்து

தன்னைத் தானே சுற்றி
சிரித்துக்கொள்கிறது
பூஜ்ஜியம்