மதினன்
எப்படி மறந்தீர்கள்
இவனை?
கோடி சாஸ்த்திரங்களும்
கோடி யுகங்களும்
ஆன்ம அழுத்தத்தில்
புதைத்து
வைத்த
இவன் உருவம்
எழுத்து வடிவம் கொண்டு
மீண்டும்
ஜனனம்
எடுக்கிறது!!
அந்த உலகம்
அரக்கன் அற்றது
விஷ ஜந்துக்களால்
தீட்டுப்்படாதது
மரணக் காற்று
வீசாதது
அங்கு
அந்த உருவம்
பெயர் 'மதினன்'
படைப்பின் காரணம்
உன் பாஷையில்
'ஆட்டோம்'
இல்லை
'ஆதவன்'
அதற்கு
வேறொரு
பெயரும் உண்டு.
ஆனால் உன்னால் அதை
விளங்கிக் கொள்ள
இயலாது!!
இந்த விசித்திரங்களை
அறிய வேண்டுமானால்
நீ
திறமைசாலியாய்
இருந்திருக்க வேண்டும்!
எதையும் ஏற்கும்
விசால பார்வை
உனக்குள்்உண்டாயிருக்க வேண்டும்
போகட்டும்,
முடிந்தவரை
மேற்கோள்
தத்துவத்தை
புரியவைக்க
முயல்கிறேன்....
மதினன்
உண்டானவன் அல்ல
உண்டாக்கப் பட்டவனும் அல்ல
உன் கதைகளில் வரும்
மாவீரனோ
சொரூபனோ
இல்லவே இல்லை!
'வெற்றிடம்'
என்று
அவனை
குறிப்பிடலாம்.
வெற்றிடம்
ஏதோ ஒரு
விஷேஷ தன்மை
கொண்டு
நிறைந்திருக்குமல்லவா?
இவன்
அந்த
விசித்திரமனவன்!
மதினன்...
இவனால்
கால் கொண்டு
நடக்க இயலாது
கரம் கொண்டு
செயல்படவும் இயலது
இவனது உறுப்புகள்
மலர் போன்றவை
மென்மையானவை
அவன் தேர்ந்த
மொழியில்
பேசுகிறான்....
ஆனால் உனக்கு
அது விளங்காது
அவனுக்கு பிடித்தவை
வான மண்டலத்தில்
பூத்துக் குலுங்கும்
வண்ணப்பூக்களும்
கடல் தட்டில்
மிதக்கும்
நட்சத்திரங்களும்...
உன்னால்
அவனது ரசனையை
புரிந்துக் கொள்ள முடிகிறதா?
குழந்தை பருவத்தில்
வானவில்லைத்
தொட்டு விளையாடுவான்!
அன்று,
கருப்பு நிறம்் அவன்
கையில் ஒட்டிக்கொண்டது!
இதுவே அவனது அடையாளம்...
தேடிப்பார்
கையில் வானவில்லின்
கருப்பு தழும்போடு
எவரேனும்
தென்படுகின்றாரா என்று...
அவன்...
அவன் தான்
மதினன்!
மற்றொரு அடையாளம்
கேட்கின்றாயா?
அன்று
சூரிய கிரகணம்...
வாலிப முறுக்கில்
குறும்பாக
சூரியனின் திசையை
மாற்ற முயல்கையில்
சிறிது தீக் குழம்புப்
அவன் கீழ்த்தாடையில்
பட்டுவிட்டது!
இன்றும்
அந்த தீக்காயம்
பதிந்த சான்றாக
அவனை விட்டு
பிரியாதிருக்கிறது!
இப்பொழுது
அவன்
யாரென்று கண்டுப்பிடித்தாயா?
ஆம்!அவன்
அவன் தான்
மதினன்....
மதினனும்
காதல் வயப்பட்டான்!
அது
ஒரு பெண்ணோ,
ஆணோ,
மற்ற உயிரினமோ
என்று
கற்பனை
செய்கிறாயா?
நிறுத்திவிடு.
மதினனைப்
பற்றி
எவராவது
கற்பனை
செய்தால்
அது அவனுக்குப்
பிடிக்காது...
அது அவனுள்
அழுகையைப் பிறப்பிக்கும்!
அவன் அழுகை
உன்னை என்ன செய்யும்
என்கிறாயா?
உன் வியர்வைத்துளி
அத்தனையும்
உன் உடல் விட்டு
வெளியேற
உத்தரவு பிறப்பிக்கும்
கேள்...
அந்த
காதலில்
அவனுக்கு
விடுக்கப்பட்ட
சவால்
கிரகணங்களை
சேர்த்து வைக்க
வேண்டும்.
ஒருவேளை
ஜோடி
தவறாக இணைந்தால்
அவன் காதல் கைகூடாது.
கவனி...
இங்கு
காதலுக்குக் கூட
மரணக் காற்றின்
வாசம் வீசாது...
மதினன் உபயோகமான
சிலவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்
அவை
கரிக்கட்டை...
கயிறு...
பம்பரம்...
பொருந்தாது
மீதமிருக்கும்
ஒரு கிரகணத்தை
சுட்டெரிக்க
கரிக்கட்டை.
பொருந்தும்
ஜோடிகளை
இணைக்க கயிறு.
முயற்சியில்
தோற்றுவிட்டால்
ஈர்ப்பு விசையிலிருந்து
விடுபட்டு
மண்டல குகையில்
அவன் சுழற்வதற்கு
பம்பரம்.
ஆரம்பம் புதன்.
பூமி இசைந்தததால் கயிறு
கொண்டு இணைக்கப்
முற்படுகையில்
அழுகுரல்...
சூரிய வெப்பம்
கொளுத்துவத்தால்
கூக்குரலிடும் மனித
பதர்கள்!
மதினன்
இரக்கம் கொண்டவன்
அதை விடுத்து
புதனை வெள்ளியுடன்
கட்டிவிட்டான்..
அனைத்து கிரகங்களும்
இணைக்கப்பட்டன.
பூமி தனித்திருந்தது...
இப்போது
இரண்டே விதிகள்்
நியமிக்கப்பட்டன...
காதல்
மணக்க
பூமியை கரிக்கட்டை
கொண்டு
சுட்டெரிக்க வேண்டும்;
இல்லையெல்...
காதல் தொலைத்து
பம்பரம் சுழற்றி
மன்டல குகையில்
சிறையிருக்க வேண்டும்
மதினன் மனிதனல்ல...
அவன் தியாகம் செய்ய
முற்ப்பட்டான்்!
பம்பரத்தில் கயிறு
சுழற்றப்பட்டது
ஓங்கி வீசி சுழற்றப்
படவேண்டிய தருணம்....
மெல்லிய குரல்
அது அவன் 'காதல்'
அவன் கண்ணீர்
வடிக்கவில்லை
வடித்தால்
உன் வியரிவைத் துளி
வெளியேறும் அல்லவா...
மீண்டும் சுழற்றப் போனான்
மெல்லிய குரல்
இது அவன் காதல்
அல்ல...
ரத்தினங்கள் பதித்த
ஜொலிப்பில்
மின்னிய
சந்திரன்
மன்றாடினான்
பூமி காதலை
தன் வசப்படுத்த..
மதினனுக்கு
அவன் மொழி
புரியாவிடினும்
'காதல்' புரிய
பம்பர கயிற்றை
எடுத்துக்
கட்டினான்
சந்திரனை பூமியோடு...
முனிவர்களும்
சாதுக்களும்
யோகிகளும்
அலறினார்கள்
வெவ்வேறு
பிரபஞ்சத்திலிருந்தபடி
இனி
மதினன் எவ்வாறு
பிழைப்பான்?
அவன் எங்கிருப்பான்?
அவனுக்கு என்ன நேரிடும்?
அவனுக்கு மரணமில்லை!
அந்த உலகத்திலும்
இடமில்லை!
மண்டல குகையிலும்
சிறைவாசம் கிட்டாது!
அவன் என்னவானான்?
கோடி யுகங்களாக
தேடிக் கொண்டிருக்கின்றனர்
மனிதர் குலம்
இந்த மதினனை...
நன்றி செலுத்த...
நீயும் தேடிபார்..
ஒருவேளை
அவன் 'இதற்குள்ளும்'
இருக்கலாம்!!!