என்
நண்பனிடத்து ஆத்திரம் கொண்டேன்;
என்
மனக்கொந்தளிப்பிடம் சொன்னேன், கொந்தளிப்பு தீர்ந்தது.
என்
விரோதியிடத்து ஆத்திரமானேன்;
அதைச்
சொல்லவில்லை, என் மனக்கொந்தளிப்பு வளர்ந்தது.
அதை
என் அச்சங்களால் நீர் வார்த்தேன்
இரவும் காலையும் என் கண்ணீரால்
நீரூற்றினேன்;
என் புன்னகைகளாலும், மென்மையான
ஏமாற்றுத் தந்திரங்களாலும் அதற்கு ஒளி
ஊட்டினேன்.
இரவும் பகலுமாய் அது வளர்ந்தது.
ஒருநாள் அதில் ஒரு ஆப்பிள் காய்த்தது.
என் விரோதி அது மினுங்கிடப் பார்த்தான்,
உடனே அது எனது என அறிந்தான்.
இரவு துருவத்தை துகில்கொண்டு மூட
என் தோட்டத்தில் அவன் திருடினான்;
காலையில் மனம்குளிர்ந்தேன் அதைப் பார்த்து;
என் விரோதி கைகால் விரித்து கிடந்தான் மரத்தின் கீழ்