நட்பெனும் பெயரற்ற மொழி - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி


In Their Memory by aquapell

புகைப்படங்களில்
மட்டும்
இன்னும்
மின்னுகிறது
நாம்
விதைத்த
சந்தோசங்களின்
நிழல்..

எந்த
சுவாரஸ்யங்களும்
இல்லை தான்
என்றாலும்
சொல்லாமல்
இருந்ததாய்
நினைவில் இல்லை..

புன்னகைகளால்
மட்டுமே
நிரம்பிய
பொழுதுகளின்
மாலை வேளையினில்
கல்லூரி
வெளியே
தேநீருடன்
நின்று
மழை ரசித்தது...

சரியாக
ஞாபகமில்லை
ஆனால்
தோழி
பேசிவிட்டு
கடந்துசென்ற
தருணங்களில்
எல்லாம்
சூடிய
பூவின் மணம்
விட்டுப்போனதில்லை
அவ்வளவு
எளிதில்..
அப்படியே உன்
யதார்த்தங்களின்
சிதறலாய்
இன்னும்
நீள்கிறது
நீ சூடியிருந்த
பூக்களை
காணும்
போதெல்லாம்...

ஒரு ஜன்னலோர
பயணத்தின்
கானலாய்
தொடர்பற்ற
காட்சி போல
இந்த வாழ்க்கை...