வாயிலில் - சாயா சுந்தரம்


இருபறவைகளின் சிறகடிப்பில் சிக்கி
உதிர்ந்து விழுந்தது
பசிய இலைகளினூடே
அரும்பத் தொடங்கிய
சிறுமொட்டொன்று

குடும்பநல கோர்ட் வாயிலில்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நடுவில் நின்று திகைக்கும்
அம்மு