- எவ்வளவு துயரமானவை இம்மாற்றங்கள்
கதவிலிருந்து பெயர்ப்பலகைகளை மக்கள்
கழற்றுகிறார்கள்
முட்டைக்கோஸ் வேகும் கைப்பிடிப்பாத்திரத்தை
எடுத்துச் சென்று
ஒரு மாறுபட்ட இடத்தில் வைத்து
சூடாக்குகிறார்கள் மீண்டும்.
விடைபெறுதலை பறைசாற்றும்
என்னவிதமான அறைகலன்கள் இவை?
மக்கள் தம் மடக்குநாற்காலிகளை
தூக்கிக் கொண்டு
குடிபெயர்கிறார்கள்.
வீட்டு ஏக்கமும் வாந்தியெடுக்கும்
முனைப்பும் நிறைந்த இந்த கப்பல்கள்
சுமந்து செல்லும் காப்புரிமை பெற்ற
அமரும் எந்திரங்களையும்
அவற்றின் காப்புரிமையற்ற சொந்தக்காரர்களையும்
முன்னும் பின்னுமாய்.
இப்போது மகாசமுத்திரத்தின் இரு
மருங்கிலும்
மடக்குநாற்காலிகள்;
எவ்வளவு துயரமானவை இம்மாற்றங்கள்.
(ஆங்கிலத்தில்: மைகேல் ஹேம்பர்கர்)