பாஷோ கவிதைகள் - மொழியாக்கம் ஆர்.அபிலாஷ்

  Image result for basho

இளஞ்சிவப்பு வண்ணங்களால் மெத்தை விரித்த
சரல்கற்களில்
குடிபோதையில் தூக்கம்
To lie drunk
On cobbles,
Bedded in pinks

நிலவில்லை, பூக்களில்லை,
நண்பனில்லை –
அவன் சகே குடிக்கிறான்.
No moon, no flowers,
No friend –
And he drinks sake.

நாம் சேர்ந்து பார்த்த
 பனி
அது திரும்பி விட்டதா?
Has it returned,
The snow
We viewed together?

தெரியாத நீரூற்று –
பிளம் பூ
நிலைக்கண்ணாடிக்கு பின்னால்
Unknown spring –
Plum blossom
Behind the mirror.

இலையுதிர் கால முடிவு –
எப்படி வாழ்வார்
என் அண்டைவீட்டுக்காரர்?
Autumn’s end –
How does my
Neighbor live?