அவரோடு - ஜெ.பாண்டியராஜ்

அவளின் அதிகாலைக் கனவில்
அவரோடு பேசியதாகக் கூறினாள்
எப்படிச் சொல்வேன்
என் நள்ளிரவுக் கனவிலேயே
அவர் இறந்துவிட்டதை