விருது - சேயோன் யாழ்வேந்தன்


இலக்கியத்துக்கான மிக உயரிய விருது
எனக்கு வழங்கப்பட்ட இரவில்
பெய்த மழை
நிற்கவே இல்லை
முழு உலகமும் அழிந்து
அப்போதுதான் உருவாகின
இன்றைய பெருங்கடல்கள்
நோவாவின் தெப்பக்கட்டையில்
ஏறித் தப்பிய என்னிடம்
இப்போது சான்று கேட்டால் எப்படி?