பிறகென்ன - பா.சரவணன்

கூப்பிய கரங்களுடன் படைக்கப்பட்டிருக்கிறோம்
எதை நோக்கி
என்பதைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம்
வழங்கப்பட்டிருக்கிறது
மேலும்
இரு செயல்களைச் செய்யும்போது
கைகளைப் பிரிக்க அனுமதியும்
அருளப்பட்டிருக்கிறதே

பிறகென்ன