ஞானஸ்நானம் - பா.சரவணன்


மழை பெய்தபோது
காணாமல் போயிருந்தது
மழையைப் பற்றிய எனது கவிதை
அதனால் என்ன என்று
தெருவில் இறங்கி
நனைந்தேன்