பள்ளிக்கூடம் - பினும் பள்ளிப்பாடு
பள்ளிக்கூடத்தில்
நாங்கள்
குடியிருந்திருக்கிறோம்
சில சமயங்களில்
மட்டும்
கல்வி
அபயமாகியிருக்கிறது
அந்திசாயும்
நேரத்தில்
ஏதோ ஒரு வகுப்பறையில்
இருந்து ஒலிக்கின்ற
சந்தியாநாமத்தை கேட்டு
நான்
நரகவேதனைப்
பட்டிருக்கிறேன்
இருட்டுக்குள்
இருக்கும்
கஞ்சிப் பானையில்
புத்தகம் மூழ்கிக்
கிடக்கையில்
இடிமுழக்கத்தோடு
வரும் காற்று
எங்கள் விளக்கொளியை
விரட்டியடித்திருக்கிறது