இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள். Show all posts
Showing posts with label மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள். Show all posts

மேற்கத்திய சர்ரியலிய கவிதைகள் - ஆர்.அபிலாஷ்




என் கையில் காயம் மீது ஜனவரி சுற்றிக் கொள்கிறது
-                                                                                                                                          - சார்லஸ் ஹென்ரி போர்டு

என் கையில் காயம் மீது ஜனவரி சுற்றிக் கொள்கிறது
ஜனவரி, ஒரு திருட்டு சிறுவனைப் போல, நகையை ஒளித்து வைக்கிறது,
அந்தி, ஒரு பளீர் குருதி வழியும் சமன்பாடு.

பகல் இரவின் பள்ளத்தின் முன் தயங்கி நிற்கும் ஒரு கவிதையை போன்ற
ஒரு கவிதையை , பட்டவர்த்தமாய், தனக்கென எழுதுகிறது.

நாளை, இந்த திறந்த புண் ஒரு கண்ணாகும்:
கன்னத்தில் வழிந்தேறும் ஒரு பனித்துளியாகும்,
தன் மனதை மாற்றிக் கொண்ட ஒரு கண்ணீர்த்துளியாகும்.

மேற்கத்திய சர்ரியலிய கவிதைகள்




தேவாலய கல்லறையில் ஒரு மனிதன்
-    பெர்னர்ட் கட்டெரிட்ஜ்
-    தமிழில் ஆர்.அபிலாஷ்


யாரென தெரியாது யாரும் கேட்டிராது வருகிறான் அவன், வந்து அங்கு நிற்கிறான்.
மூச்சே வராது சுவாசிக்கிறான், கைகள் சதையையும்,
 ஊன்றுகோலையும் பற்றுகின்றன. சிறு குன்றுகள்
மீதாய் துள்ளிச் செல்கிறான்
தன் பாதங்கள் நிலத்தில் பதிந்து ரோஜாக்கள் மிதக்கும் ஒரு குவளையில் இறங்க.

முட்டாள் கல்லறைகளை உதைக்கிறான்
சத்தமாய் சில ஆசைகளை பிளந்து மரச்சிலுவைகளை தனக்கு செய்கிறான்
சிரிப்புடன் அவற்றை சுமந்து எடுத்து நாத்திகனின் அத்திமரத்தில்
தொங்க விட கொண்டு செல்கிறான்

திறந்த வாசல் வழி பல்டி அடித்து போகிறான்
வருகையாளர் பதிவேட்டில் ஸ்வஸ்திக குறியால் ஒப்பமிடுகிறான்
பிறகு மூடின இரும்பு வாயில் கதவு வழி போகிறான்
தன் சட்டைப்பொத்தான் துளையில் பேன்ஸி பூ சூடியபடி

மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள் (3) - ஹேரி கிராஸ்பை (1898-1929)


தீப்பந்தம்  
நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று?
நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும்.
இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில்
“பைத்திய ராணி” பிறப்பாள்

மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள் (1) - ஆர்.அபிலாஷ்



புயல் அங்கிருந்தது -  பிராவிக் இம்ப்ஸ்
 

வானத்தில் பறந்தன
எல்லா காட்டுவாத்துக்களும்
வானில் பறந்து கொண்டிருந்தது பனி
விரைந்து கொண்டிருந்தன நதிகள் கடல் நோக்கி
நடுக்கடல் அலைகளோ கரை நோக்கியும்