இன்மை - கவிதைக்கான இணைய இதழ்

Showing posts with label நவீன ஹைக்கூ. மொழியாக்கம். Show all posts
Showing posts with label நவீன ஹைக்கூ. மொழியாக்கம். Show all posts

நவீன ஹைக்கூ (தமிழில் ஆர்.அபிலாஷ்)





வயதான குதிரைகள்
அவற்றின் கண்களில்
முடிவற்ற மழையின் நாட்கள்
Old horses
Days of endless rain
In their eyes
-    Ron C. Moss, Australia

ஜாடியில் அவள் அஸ்தி –
ஒருமுறை எங்கள் சிற்றறையின் அடுப்பெரித்தோம்
கவிதையின் பக்கங்களால்
-    எரிங் ப்ரீஸ்-பாஸ்டட், கனடா
Her ashes in a vase -
Once we lit our cabin stove
With drafts of poems
-    Erling Friis-Baastad, Canada

காலை மூடுபனி
தேவாலயப் படிகளில்
பன்னிரெண்டு கறுப்பு ஷூக்கள்
-    ஜோ மக்கியோன், ஓஹியோ
Morning fog
Twelve black shoes
On the church steps
-    Joe McKeon, Ohio
கிறித்துமஸ் காலை
ஆடும்குதிரை பொம்மையின்
நீலக்கண்
-    ஆன் மக்யார், மசசூஸட்ஸ்
Christmas morning
The blue eye
Of the rocking horse
-    Ann Magyar
-    Massachusetts
முதல் கனவு
சிறுபறவை அழைக்கிறது
என் ரகசியப் பெயரை
-    பி.ஜி.எம், கலிபோர்னியா
First dream
A small bird calls
My secret name
-    Pjm, California


நவீன ஹைக்கூ - தமிழில் ஆர்.அபிலாஷ்




ரூத்.எம்.யாரோ

பனிப்பொம்மையின் கண்
வசந்த மழையில்
மூழ்குகிறது

Ruth M. Yarrow
snowman's eye 
sinking in 
the spring rain
******************************************************
ஜோய்ஸ் வாக்கர் குரியர்

இலையுதிர் பருவ மதியம்
குருவியின்
நிழலில் நிற்கிறேன்

Joyce Walker Currier
Autumn afternoon: 
I stand on the shadow 
of the sparrow
******************************
டெரோல்ட் டி. பிரைடா

முதியவர்
கையிலுள்ள
நிழலை மூடுகிறார்

Darold D. Braida

the old man 
closes the shadow 
in his hand
***********************************
பில் போலி

முதியவள்
அவள் ஊசிக் கண்ணில்
மழை

Bill Pauly

Old woman, 
rain in the eye 
of her needle
**************************************
ராபர்ட் எப். மெய்னோன்
பனிவெளி
நிலவொளி மட்டுமல்ல
நிலவும் கூட

Robert F. Mainone

fields of snow 
not only moonlight 
but the moon


நவீன ஹைக்கூ (2) - தமிழில் ஆர்.அபிலாஷ்


நவாஜோ தேச நிலா
ஓநாயின் அழைப்பு
ஒரு ஓநாய் கூட இல்லை
கேரி கேய்
Navajo moon
the coyote call
not a coyote
Garry Gay

இரங்கல் குறிப்பில் இருந்து
சொற்களை அழித்தல்
உதிரும் இலைகள்
-    மார்க் ஸ்மித்
deleting words
from the eulogy
falling leaves
Mark Smith

நீரில் சுவைக்கிறேன்
கிணற்றை -
கோடை நட்சத்திரங்கள்
-    மார்ஜொரி புளூட்னெர்
tasting the well 
in the water—
summer stars
Marjorie Buettner

பெரிய டிப்பர் பறவை
எங்கு நான் நின்றாலும்
மலையின் ஆகாயம்
-    மிஷல் ஸ்காபர்
  the big dipper
no matter where I stand 
      mountain sky 
Michelle Schaefer

கோடை கடக்கிறது
புழக்கடை பிளமிங்கோ பறவையின்
துரு பிடித்த கால்கள்
-    மிஷல் ஸ்காபர்

summer passing
the yard flamingo’s
rusty legs 
Michelle Schaefer


நவீன ஹைக்கூ (ஆர்.அபிலாஷ்)


ஈக்கள் காத்திருக்கும்
பசுவின் முகவாய்க்கு கீழ்
வசந்தகால மழை
-    டெம்பிள் கோன்

flies wait it out 
under a cow’s chin 
spring shower
- Temple Cone

நிலவில்லை
உருளைக்கல் தரையில் உயரகுதிகால் செருப்பின்
கிளிக் கிளிக்
-    எர்னெஸ்ட் பெர்ரி

no moon 
the click of stilettos 
on cobblestones
- Ernest Berry

நதிச் சேறு
சிறுவர்களின்
வடிவம்
-    ஜெய்ன் மில்லர்

river mud
the shape
of boys
Jayne Miller

எங்கோ மழையாகிறது மழை எங்கோவாகிறது
-    ஜிம் கேசியன்

somewhere becoming rain becoming somewhere
Jim Kacian

அம்மாவின் திறந்த கல்லறையில்
ஒன்றுசேர்ந்து அரவணைக்கிறோம் –
ஒழுங்கற்ற மழைக்காலம்
-    அனிதா குரன் குவனின்

we huddle
over mother’s open grave—
lawless winter
- Anita Curran Guenin