நவீன ஹைக்கூ (ஆர்.அபிலாஷ்)


ஈக்கள் காத்திருக்கும்
பசுவின் முகவாய்க்கு கீழ்
வசந்தகால மழை
-    டெம்பிள் கோன்

flies wait it out 
under a cow’s chin 
spring shower
- Temple Cone

நிலவில்லை
உருளைக்கல் தரையில் உயரகுதிகால் செருப்பின்
கிளிக் கிளிக்
-    எர்னெஸ்ட் பெர்ரி

no moon 
the click of stilettos 
on cobblestones
- Ernest Berry

நதிச் சேறு
சிறுவர்களின்
வடிவம்
-    ஜெய்ன் மில்லர்

river mud
the shape
of boys
Jayne Miller

எங்கோ மழையாகிறது மழை எங்கோவாகிறது
-    ஜிம் கேசியன்

somewhere becoming rain becoming somewhere
Jim Kacian

அம்மாவின் திறந்த கல்லறையில்
ஒன்றுசேர்ந்து அரவணைக்கிறோம் –
ஒழுங்கற்ற மழைக்காலம்
-    அனிதா குரன் குவனின்

we huddle
over mother’s open grave—
lawless winter
- Anita Curran Guenin