மேற்கத்திய சர்ரியலியக் கவிதைகள் (1) - ஆர்.அபிலாஷ்



புயல் அங்கிருந்தது -  பிராவிக் இம்ப்ஸ்
 

வானத்தில் பறந்தன
எல்லா காட்டுவாத்துக்களும்
வானில் பறந்து கொண்டிருந்தது பனி
விரைந்து கொண்டிருந்தன நதிகள் கடல் நோக்கி
நடுக்கடல் அலைகளோ கரை நோக்கியும்


வேலியில் இருந்து ஓடிக் கொண்டிருந்தன குதிரைகள்
வேலிகள் ஓடிக் கொண்டிருந்தன பூமியில் இருந்து
பூமி தப்பித்து பறந்து கொண்டிருந்த்து வானில் இருந்து
வானம் முழுக்க நிரம்பியிருந்த்து பறக்கும் நட்சத்திரங்களாலும்
எண்ணற்ற சூரியன்களாலும்
டெய்ஸிப் பூக்கள் துள்ளி விழுந்தன புற்களில் இருந்து
மலையோர பைன் மரங்கள் தப்பித்துக் கொண்டிருந்தன
மலையும் கூட ஓட்டத்தில் இருந்தது, ஆனால்
தெற்கே பறக்கும் வாத்துகளை விட
வசந்தகால நதிகளை விட
மெதுவாக ஆனாலும் அது ஓட்டத்தில் தான் இருந்த்து



கற்கள் ஒன்றன் மேல் இன்னொன்றாய் உராய்ந்து தேய்ந்திட
சரளைக் கற்கள் அரைந்து தூசாக, புயலுக்கு முன் தப்பித்தபடி இருந்த்து அது
II
எல்லாம் தப்பித்தபடி இருந்தன
கொஞ்சம் தொலைவு பின்னிட்டாலும் நானும் கூடத் தான்
என் தப்பியோட்டம் பறக்கும் மேகத்தை விட விரைவாக
புயல் அங்கு இருந்த்து என்று மட்டுமே தெரியும் எனக்கு
பெரும் வேகத்துடன் கம்பீரமாய் திமிராய்
அற்புதமான வாளை விட கூர்மையாய்

III

ஆக நான் தப்பித்தபடி இருப்பேன்
வேகமாய் இன்னும் வேகமாய்
என் ஆன்மா புயலுடன் உரசிப்
பற்றிக் கொள்ளும் அளவு வேகமாய்
அதன் பின்
உதிர்வேன் விரிசலுற்ற பழுப்பு இலையாக
என் ஊன் பூஞ்சாணோடு சுருங்கிப் போக
குருதி ஊறி இறங்கும் மழையுடன் கரைய
என் தேகத்தின் தப்பி ஓட்டமெல்லாம் ஒரு விநோத மறுவருகை ஆக


கவிஞர் பிராவிக் இம்ப்ஸ் சிறு குறிப்பு