நீர்ப் பிரவாகம்
வெடித்த பாறை
விளிம்புகளில் பாசி முளைகள்
ஒளித்தொகுப்பு பரவிடத்தடுக்கும்
மென் குளிரும் நிழலும்
ஈரலிப்பில் வளரும் பச்சையங்கள்
தேடுவதாக குரைத்து ஓடுகிறது
கழுத்துப் பட்டி கழற்றிய மோப்ப நாய்
புகை கிளம்ப
கறுத்து வாடும் புல்வெளிகள்
பல்லி எழுப்பும் ஒலிகளில் தீருகிறது
சிறு பிணக்குகள்
உருகும் ஈயத் தண்ணீரில் மை செய்து பூச
மறைந்து விடுகிறது மனக்காயங்கள்
என் பிரச்சினைகளுக்காக
சிகரட்டு புகைக்கிறேன்
அதுவும் ஒரு தீர்த்தல் கருவியே.
ஆங்கங்கே அடைப்புக்கள்-
ஓடுகிறதும்
வருகிறதுமான
வாய்க்காலின் வழிகளிலே.
புனல்கள் நீண்டதூரம் செல்வதேயில்லை
இடைநடுவே குமிழியாவதால்
எங்கோ கிளம்பிய கந்தக மணத்தை
காற்றே சுமந்து வருகிறது.
..