மின்சாரம் - கதீர்





தழுவ ஊருகின்ற நிலவு அது.
இமை வெட்டி வெட்டி நட்சத்திரங்கள்.
சுவாசிக்கும் காற்றை பிரதிமை செய்து
கீறிச்செல்லும் முகில்கள்.
சமச்சீர் என்று எதுவும் இல்லை
படைப்புகள் பலவிதம்.

முகம் சிவந்த வான் பறவையின்
நள்ளிரவுக் கத்தலில்
தலை திருப்பி தோல் சிலிர்த்து நகருகிறது
நாய்


தெருக் கம்பத்தின் இரண்டு கிடைக் கம்பிகளில்
நிர்வாணமாய் ஓடுகிறது மின்சாரம்.
ஆடை அணிந்த வீடது
பின்னிரவிலும் எரியும்
படுக்கையறை மென் ஒளி மின்குமிழ் ஊடே
சாமக்கோழி கூவியும் கூடல் கலையாத
நீலப்படம் பார்த்துத் திரும்புகிறது அது.