முதல் விருப்பக் கவிதை
ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை எப்படியாகிலும் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற ஆவலில் கண்கீழ் வளையங்களுடன் இரவுகளில் உறங்காமல் இருநூற்று எண்பத்தாறாவது முறையாகக் கையெழுத்துப் பிரதியாகவோ அல்லாது டீடிபீ செய்த காகித அடுக்காகவோ தத்தமது கவிதைகளை வரிசையாக்கி வெறித்தபடி நிற்கச்செய்வது எது..?ஒரு முன்னுரையை எழுதிவாங்குவதற்காக முன் வென்ற மூத்தவர்களிலொருவரை அல்லது சிலரை அணுகி அவர் தம் கவிதை குறித்தெல்லாம் பேசிவிட்டுக் கடைசியாக ஒரு முன்னுரை எழுதித் தர ஏலுமா எனக் கேட்டு அவரும் சம்மதித்து அனுப்பி வைத்தபின் முன்னுரை வந்து கைக்குக் கிட்டும் வரை பல்லெலாம் ரத்தம் வழியத் தரைபுரண்டு காத்துக்கிடக்கும் வாம்பயர் கண்களை உருவாக்குவது எது.?பிரசவத்தின் பின் அழுகுரலுடன் தன் கணக்கைத் துவங்கும் புதிய உயிரைப் பார்ப்பதை விடவும் அதிகமான உற்சாகத்தைத் தான் எழுதிய பத்துப் பன்னிரண்டு வரிகளைப் பிரசுரத்தில் பார்க்கையில் அடைகிறானே...அவனை இயக்குகிற குறளிச்சொல் எது..?
இதெல்லாமும் கவிதை கவிதையன்றி வேறில்லை.சென்ற அத்தியாயத்தைப் படித்த புண்யாத்மாக்களுக்கு ஒப்புக்கொடுத்த பிரகாரம் அந்தக் கடைசி கவிதையை எழுதியவர் யார் எனச்சொல்லி விட்டு இன்றைய ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.அதனை எழுதியவர் புதுமைப்பித்தன்.
சொந்த மொழியில் எழுதப்படுவதும் வேறெந்த மொழியிலும் பெயர்க்கவியலாததும் கவிதை///இது கவிதைக்குக் கிட்டுகிற அனேக இலக்கணங்களில் ஒன்று.அதெப்படி..?மொழிபெயர்ப்புக் கவிதை என்ற ஒன்றே இல்லை என்றாகுமா என்ன..?அப்படிப் பார்த்தால் தமிழில் எழுதப்பட்ட கவிதைகள் தமிழிலேயே இருந்து சாகவேண்டுமா..?பன்னாட்டு சாத்திரங்கள் தமிழில் கொணர்வது அசாத்தியமா..?அப்படி அல்ல.இந்த இலக்கணத்தை உற்றுப் பார்த்தால் இன்னொன்று விளங்கும்.கவிதை என்பதற்கு இன்னது தான் இலக்கணம் என்று ஒரு சிகரவுச்சியில் பறந்துகிடக்கும் கொடி இலக்கணம் எதுவும் இல்லை.என்றபோதும் கவிதைக்கென்று இதுவரை சொல்லப்பட்ட இப்போது சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற அத்தனை இலக்கணங்களையும் நாம் புறந்தள்ளவும் தேவை இல்லை.இந்த இரண்டையும் மறுதலிக்காமல் உள்ளே ஊசியாகவோ அல்லது கேப்ஸ்யூலாகவோ உட்கொண்டாலொழியக் கவிதையம்மனின் கடைக்கண் அனுக்கிரகம் ஒருவருக்கும் கிட்டாது என்பது மட்டும் நிசம்.
இலக்கணங்கள் சுவாரசியமானவை மட்டுமல்ல.அவை அனர்த்தமானவை அல்ல
என்பதையும் கவனத்திற்கொண்டால் நல்லது.அவை கவிதை என்னும் வடிவத்தைப்
புரிந்துகொள்வதற்குத் தங்களால் இயன்ற பணியைச் செய்துதருகின்றன.அதனால் மேலை
நாட்டு இலக்கணம் மலையாள இலக்கணம் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் பாராது
எல்லா இலக்கணங்களையும் கலந்துகட்டியாய் எடுத்துக்கொண்டே அவற்றின் சாற்றினை
மட்டும் உறிஞ்சிவிட்டுக் கிளம்பிக் கொள்ளவேண்டியது தான்.
அது இன்னுஞ்சவுக்கியம் தரும்.
அது இன்னுஞ்சவுக்கியம் தரும்.
ஒவ்வொரு இலக்கணமாகப் பார்த்துப் பரிச்சயம் பண்ணிக்கொள்ளலாம்.குறைந்தபட்சம் ஒரு ஹலோ சொல்லிவைக்கலாம்.வேணுங்கிறவர்க் கு வேணுகோபாலன்..அது அவரவர் இஷ்டம்.
கவிதை என்பது ஒரு ஆச்சரியத்தின் வாயிலாகத் தொடங்குவது என்பேன்.என்னளவில் கவிதை என்பது வாசிக்கிறவனை ஏதோ ஒரு விதத்தில் மிக அத்யந்தமான ஓரிடத்தில் நின்றுகொண்டு கிளர்த்தவேண்டும்.அப்படிக் கிளர்த்துவது என்பது இலகுவான முதல் சமிக்ஞை.மேலும் கவிதை என்பது எத்தனை வரிகள் என்பது துவங்கி அளவுச்சட்டை கொடுத்துப் பெறும் அடுத்த சட்டை அல்ல என்பது என் நம்பகம்.எந்த ஒரு வாசகனும் தன் முதல் விருப்பக் கவிதையை வாசிப்பதற்கு முன்னால் பல கவிதைகளை தாண்டித் தாண்டிச் செல்கிறான்.கதை துவங்கி வெகுநேரம் சந்திக்காத இரண்டு பாத்திரங்களைப் போலக் கவிதைகளினின்றும் தன்னைத் தப்பித்துக் கொண்டே பகடையாடுகிறான்.அப்படிப்பட்டவனு
அப்படி இருக்கிறவன் தான் வேறோரு சாலையில் கவிதை ஒன்றின்
குறளிக்கு மயங்கிச் செல்லுமிடம் மறந்து தன்னுடையில் பூசப்பட்ட மந்திர
மையின் மகிமையில் சொன்னதற்கெல்லாம் ஆடத்துவங்குவானே அற்பசாதாரணன் அவனைப்
போலக் கவிதையைப் பின்பற்றி அதன் அடியொற்றித் தன்னை மறந்து செல்லத்
தலைப்படுவான்.
ஒரு சிறந்த வாசகன் மொழியின் மற்ற எழுத்துவகைமைகளான புனைவு அ-புனைவு என்கிற இரண்டில் எதாவது ஒன்றைத் தன் பொது ரசனையாகக் கொள்வது வழக்கம்.அப்படிப் புனைவைக் கையிலெடுக்கிற வாசகனும் கூட கவிதை அ-கவிதை எனப் பிரித்துக் கொள்வது அவன் வசதிக்காக.நாவல் சிறுகதை குறுங்கதை கட்டுரை எனப் புனைவின் பிற அடுக்குகளுக்குள் சஞ்சரிக்க விரும்புகிறவர் அனேகம்.அதைத் தவிர கவிதை என்பதைத் தன் விருப்பமாக நேரடியாகக் கொள்பவர் எண்ணிக்கை அளவில் சொற்பமானவரே இருந்துவிடக் கூடும்.
முதல் விருப்பக் கவிதை என்பது எதுவோ அதனைத் தொடர்ந்து
காலகாலத்துக்கும் ஓடிக்கொண்டே இருக்கிற தீராத ஓட்டகளம் ஒன்றில் தானும்
இறங்கிக் கொள்கிறான் வாசகன்.என்னளவில் என்னை முதன்முதலில் கிளர்த்திய கவிதை
என ஆத்மாநாமின் இரண்டு கவிதைகளைச் சொல்வேன்.
இந்தக் கவிதை
எங்கு எப்படி
முடியும்
என்றெனக்குத் தெரியாது
முடியும்போது
இருக்கும் நான் (இருந்தால்)
ஆரம்பத்தில்
இருந்தவன் தானா..?
காகிதத்தில் ஒரு கோடு தொகுப்பில் இடம்பெற்ற ஆத்மாநாமின் கவிதை.இன்னொரு ஆத்மாநாம் கவிதை.
பழக்கம்
எனக்குக் கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக் கொண்டிருந்தேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
எனக்குக் கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக் கொண்டிருந்தேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்கமுடியவில்லை
ஒரு சதுரத்தில் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
நானென்ன ஆயிரம் நாட்கள் ஆயிரம் பாம்புகளுடனா..?
என்று வரும் வரியில் அயர்த்திச்செல்லும்.மேலே இருக்கும் முதற்கவிதையில் "இருந்தால்" என்னும் சொல் அடைப்புக்குள் வருவதை உற்று நோக்கினால் அதனை பதிலீடு செய்யக் கூடிய இன்னொரு சொல் இல்லை என்பது கவிதையின் அழகு.ஆத்மாநாம் மிகவும் அந்தரங்கமான தொனியிலும் உரத்த குரலிலும் கலைத்துப்போட்டுத் தன் கவிதைகளை மொழிந்தார்.
என்று வரும் வரியில் அயர்த்திச்செல்லும்.மேலே இருக்கும் முதற்கவிதையில் "இருந்தால்" என்னும் சொல் அடைப்புக்குள் வருவதை உற்று நோக்கினால் அதனை பதிலீடு செய்யக் கூடிய இன்னொரு சொல் இல்லை என்பது கவிதையின் அழகு.ஆத்மாநாம் மிகவும் அந்தரங்கமான தொனியிலும் உரத்த குரலிலும் கலைத்துப்போட்டுத் தன் கவிதைகளை மொழிந்தார்.
முதல் கவிதைத் தொகுப்பிற்கான ஆவல் குறித்துப் பேசியிருக்கிறோம்.இப்போது கவிஞன் என்பவனைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.கவிஞன்
என்பவன் யாராக இருக்கிறான்..?சதா சர்வ காலமும் மொழியை வியக்க
விரும்புகிறான்.மொழியின் இண்டு இடுக்குகளெல்லாம் புகுந்து பார்த்துவரப்
புறப்படுகிறான்.
மொழியின் சாத்தியங்களை மீறிப் பார்க்கிற கயிற்று நுனியைக் கைவிடாது பற்றிக்கொண்டு மூடிய கண்களைப் பற்றிக் கொஞ்சமும் உணர்வில்லாமல் நகர்ந்துகொண்டே இருக்கத் தலைப்படுகிறான்.ஒழுங்கானவர்களை
ஏதேனும் ஒரு மொழியிலாவது கவிதை செத்துவிட்டது எனச்சொல்ல முடியுமா..?கவிதை என்பதன் இடம் எல்லா மொழிகளிலும் வழிபடுவதற்கானதாகவும் மிகக் குறைவானவர்களின் ப்ரதேசமாகவும் இருப்பதன் ஒற்றுமை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான்.கவிதை என்பது இருப்பது போலவே இல்லாமற்போவது.இல்லாமற்போன பின்பு இருப்பது.
கவிதை
அரிப்பு.
எழுதாமல்
தீராது.
எழுதினாலும்.
இந்த வரிகள் ஏற்புடையதாய்த் தோன்றுகின்றன.
பித்து நிலையைக் கவிதை கொண்டாடுகிறதா..?இல்லை.பித்து நிலை என்பது கவிதையின் சமதளமாகின்றது.புறவுலகம் அகவுலகம் இவ்விரண்டிற்கும் நடுவே கவிதையை நம்புகிற மனங்கள் ஊசலாடுகின்றன.அப்படி ஒரு மனம் இன்னொன்றோடு உடன்பட எந்த அவஸ்யமும் இல்லாமற்போகிறது.சாத்தியம் ஒன்றே ஒன்று தான்.புறவுலகத்திற்கும் அகவுலகத்திற்கும் இடையில் அல்லாட வேண்டும்.அவ்வளவு தான்.
கவிதை என்பது நம்பகங்களைத் தட்டிப்பார்க்கிறது.எதையும் நிரூபிக்கிற சூத்திரங்களைச் செய்துவிடுவதில்லை.மாறாகக் கவிதை எதையும் நிரூபிக்க வேண்டிய சூழல்களை அறுத்தெறிகின்றது.கவிஞன் சதா சர்வகாலமும் உணர்தலோடு இருக்கிறான்.எதையாவது உணர்ந்துகொண்டும் உணர்ந்ததைப் பகிர்ந்துகொண்டும் மறந்துகொண்டும் இரண்டையும் வியந்துகொண்டும் அலைகிறான்.மறுதலிப்புக்களின் பேராலயமாகக் கவிதையை ஆக்குகிறான்.கவிதை அவனை மறுதலிப்புகளின் பிரார்த்தனையாக மாற்றுகின்றது.
கவிஞன் தனியே பிறந்து வளர்ந்து வருபவனல்லன்.மாறாகப் பிறந்து வளர்ந்து தனியே வருபவனாகிறான்.தனிமை கவிதையின் பொதுச்சொல்லாக விருட்சிக்கிறது.கூட்டம் கவிதையைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொள்கிறது.கவிஞன் பேசவேண்டியவற்றுக்கான பின்மொழியாகப் பின் குரலாகத் தனிக்கிறான்.கவிதை பிறக்கிறது.
என்வீட்டுப் பரண்பொருள்
இரும்புப் பெட்டியில் அல்ல
குப்பைத்தொட்டியில் அல்ல
பரணில் கிடக்கிறது
நான்
தின்னமுடியாத
எச்சிற்பூமி
தேவதச்சன் அவரவர் கைமணல் தொகுப்பின் ஒரு கவிதை.இந்தக் கவிதையின்
ஆதிச்சொல்லாக எச்சிற்பூமி என்பதை நிறுத்தலாம்.இதற்குப் பதிலியாக இன்னொரு
சொல்லை யோசிப்பதன் மூலம் வேறொரு கவிதைக்கு இட்டுச் செல்லக் கூடும்.
பாப்லோ நெரூடா உலகின் ஆதர்சக் கவிதைக்காரன்.
பாப்லோ நெரூடா உலகின் ஆதர்சக் கவிதைக்காரன்.
எனக்கு சொல்லுங்கள், ரோஜா நிர்வானமாக இருக்கிறதா
அல்லது அவளின் உடையே அதுதானா?
ஏன் மரங்கள்
தங்கள் வேர்களின் மேன்மையை மறைத்துக்கொள்கின்றன?
திருட உபயோகப்படுத்தும் வாகனத்தின்
வருத்தத்தை யாராவது கேட்கிறார்களா?
மழையில் தனியாக நிற்கும் இரயிலை
விட துயரமானது ஏதேனும் இந்த உலகில் இருக்கிறதா?
- பாப்லோ நெரூடா (மொழிபெயர்ப்பு - சர்வோத்தமன்)
69 வருடங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த சிலி நாட்டுக் கவிஞர் நெரூடா தனது எழுத்துக்காக நோபல் பரிசை வென்றவர்.முழுவதுமாக சிலி நாட்டு அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்த மனிதர்.ஒரு அரசில் செனட்டாராக இருந்த நெரூடா இன்னொரு அரசாங்கத்தால் கைது உத்தரவு இடப்பட்டு தேடப்பட்டு தரைக்கடியில் ஒரு பாதாள அறையில் மறைந்து கொண்டு அடுத்தாற்போல் வந்த அதிபருக்கு ஆலோசகராக இருந்துகொண்டு நோபல்பரிசை வென்று என பல நிசமான திருப்பங்களுடன் கூடிய வாழ்க்கையை வரமாய்ப்பெற்றவர்.
இவரது புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை
the book of questions
Residence on earth
I explain a Few things
Estravagario
Twenty love poems and a song of despair
On the blue shore of silence
தொடரலாம்