“பஸ் ஸ்டாண்டில் மாகாளி
பஸ் ஸ்டாண்ட் படிக்கட்டுகளில்
மாகாளி இறங்கி வருகிறாள்
முலைகளுக்கிடையே நீரோடையைப் போல் இறங்கும்
அவளது சேலை
கொப்பூழையும் வயிற்றையும்
கட்டவிழ்த்து விட்டிருந்த்து
தாள வாசனை நுகரப்படாத
ஒட்டாத ஒலிகளின் இசைக் கோர்வை அவள்
கருப்பு சூரியனாக தகிக்கிறாள்
அவளது ஒளிக்கு மயங்கிய ஆண்கள்
அங்காங்கு இருந்து முற்றுகையிட்டனர்
நிறைந்த போதையில் தள்ளாடிய அவள் நடை
பஸ் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்திருந்தது”
என ஆரம்பிக்கும் ஜி.எஸ் தயாளனின் கவிதையை சிலேட் இதழ்
ஒன்றில் படித்துக் கொண்டிருந்தேன்.
"பஸ் ஸ்டாண்டில் மாகாளி" படிக்கட்டு வழியாக இறங்கி போதையுடன் தள்ளாடி வந்து
கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் கவனத்தை அவள் மீது
திருப்பிக் கொண்டனர்.
வசியம் செய்யும் உடலழகு வைத்தக் கண் வாங்காமல் கிறங்கடிக்க வைத்தாலும், அவளின் குளறியப் பேச்சு எல்லோரையும் தும்வம்சம்
செய்து தலை குனியச்
செய்கிறது.
நாகரம்மனை நாகராஜாவாக மாற்றிய மோசடிக்கும், மருமக்கள் வழி மக்கள் வழியாக மாறிவரும் ராஜ தந்திரத்திற்கும், பெண்களை
பர்தாவுக்குள் சிறையெடுத்த
வகாபிசத்திற்கும், பெண்ணை
பாதிரியாக ஏற்க இயலாத வக்கிரத்திற்கும், புத்தத்
துறவியின்னா மழித்த தலையோடு குழல் குறியும்
வேண்டுமென்ற வஞ்சகத்திற்கும், பெண்கள் மீதான வன்முறை, ஜாதிய ஒடுக்குமுறை, மதங்களுக்குள் புகுந்த ஆணாதிக்க சிந்தனை, சமூக அநீதிகளை,
மனத் துயரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி கோபக்கனலால் இந்த பூமியை காறித்
துப்புகிறாள்.
நெஞ்சில் கோடிக்கு மேல் புஷ்பவாசம்
திரண்டெழுகின்றது. அதன் வாசம் உணரும் படியாய் காற்றெங்கும் அதிர துள்ளி எழுகிறாள்.
உணவை
சமைப்பதிலிருந்து சாப்பிடுகிற வரைக்கும் ஜாதி சால்ரா
போடுகிறது. மதம் மனிதனை பண் படுத்துகிறதோ? இல்லையோ?
பாழாய் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆண்களின் வக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பெண்
சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றாள்.
புனைப் பெயர்களும் பலர்
சூட்டி,
ஆண்கள் உத்தமர்களாகி விடுகின்றனர்.
எண்ணிலடங்கா ராதைகளோடு கண்ணன் கொஞ்சி
குலாவுகிறான். ஆனாலும் எங்களையும் கண்ணன் தீண்ட மாட்டானா என கணக்கில்லா ராதைகள் ஏக்கம் கொள்கின்றனர்
என்று கட்டமைக்கப்பட்டுள்ள பூமியில், லிங்கக் குண்டலத்தை வெற்றுடலால் மிதித்துக் கடக்கிறாள் மாகாளி.
ஜி.எஸ்.தயாளன் கவிதை வழியாக இந்த பூமியை மாகாளி உமிழ்ந்து தள்ளுகிறாள்.