1. பொம்மைகளை
பாலூன்களை
ரிமோட் கார்களையெல்லாம் பிடிக்கிறது
இவைகளை போலில்லாமல்
என்னையும் பிடிக்கிறது
செல்ல மகள் காயத்ரிக்கு
2. நான்
கோபப்பட்டால்.,
சிரித்தால்
ஏன்
அழுதால் கூட புரிகிறது
அவளுக்கு.
ஒரு கழுதை வயதாகியும்
எதையும் வெளிப்படுத்த முடியவில்லை
அவளைத் தவிர
யாரிடமும்.
3
எழுதிய கவிதைக்கு மேல்
பென்சிலால் கோடு வரைந்தாள்.
உச்சி முகர்ந்து
உற்றுப் பார்த்தேன்
என் கவிதையை விட அழகு.
4
போட்டோக்களுக்கு
முத்தம்
கண்ணாடிக்கு
முத்தம்
புது டுரஸ்ஸில் உள்ள
பூவுக்கு முத்தம்
ஏமாற்றி விட்டு
அலுவலகம் செல்லும்
அம்மாவுக்கும் கொடுக்கிறாள்