நட.சிவகுமார் குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த கவிஞர். “உவர்மண்”, “வெட்டிமுறிப்பு
களம்” ஆகியன இவரது தொகுப்புகள். வண்ணான் சாதியினரின் பண்பாட்டு தளம், அரசியல்
ஒடுக்குமுறைகள், மாந்திரிக உலகம், குடும்ப உறவுகளின் மென்மையான பரிமாணங்கள்,
தனிமனிதன் குடும்பத்துக்குள் ஒடுக்கப்படுவது ஆகியவை இவரது பாடுபொருட்கள். குமரி
மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் தமிழ்
பேராசிரியரும் கூட.