தனிமையாய் - லாவண்யா




விரிந்திடும் வானமெங்கும்
சிறகடிக்கும்
தனிமையின் பறவை நான்
இந்த பொன் மாலை பொழுதில்
நிலா தெரிகிறது
பூமி தெரிகிறது
எவரிடத்தும்
தொலைவிலுமில்லை