தனிமைக்குள் தனியனாகி
தனித்துத் தனக்குள் அவயங் கொண்டு
புத்தி தேய குறுகி வலுத்து
கனவில் விரிந்தெழும் ராட்சதத் தும்பையின்
வெண்ணாழத்தில் ஒளிந்து
இரு கை கொண்டு இருள் வழித்துண்டு
கண்கள் சிவந்தெரிய
எழுந்து பார்த்தால் விடிந்திருக்கிறது
உன்னைக் கடப்பதும்
என்னைக் கடப்பதும்
காலத்தைக் கடப்பதும்
எல்லாமே எளிதுதான்
தனித்துத் தனக்குள் அவயங் கொண்டு
புத்தி தேய குறுகி வலுத்து
கனவில் விரிந்தெழும் ராட்சதத் தும்பையின்
வெண்ணாழத்தில் ஒளிந்து
இரு கை கொண்டு இருள் வழித்துண்டு
கண்கள் சிவந்தெரிய
எழுந்து பார்த்தால் விடிந்திருக்கிறது
உன்னைக் கடப்பதும்
என்னைக் கடப்பதும்
காலத்தைக் கடப்பதும்
எல்லாமே எளிதுதான்
கண் மூடினால் அமைதி
கண் திறந்தால் சுழல்
பள்ளம் வெட்டி வெட்டி
பதுங்கிப் பதுங்கிப் போய்க் கொண்டிரு
நீளும் நிழலென
உன் பின் வரும் காலம்
கவிஞர் பொன்.வாசுதேவன் ஒரு அறிமுகம்.