நாம் எல்லோரும், எப்போதும்
ஒன்றுக்கு மேற்பட்ட
நாடகங்களின் அங்கமெனவே
இருக்கிறோம்....
பல்வேறு இயக்கங்கள்
குழுமி,
தங்களுக்குள் அளவளாவி
நாடகங்களை
உருவாக்குகின்றன....
நம் எல்லோருக்கும்
ஒரு நாடகத்தின் அத்தனை
இயக்கங்களையும்
கடந்து போகக்கூடிய
வாய்ப்பு
எப்போதுமே
கிடைப்பதில்லை....
நம் கவனங்களில் பதிந்த
இயக்கங்களை
நாம் அசைபோட்டுப்
போகையில்,
நம் கவனங்களில் பதியாத இயக்கங்களின்
பதிவுகளே
இலக்கியம் ஆகின்றன...
நம் பெரும்பான்மை
கவனங்களில்
பதியாத இயக்கங்களே
புதினங்களின்
நுழைவாயில்...