மிகவும்
பலவீனமானது
என் அன்பு
ஒரு கண்ணாடிச் சாடியைப் போல
உடைத்தெறியப்பட்டபோதும்
ஒரு பொம்மையை
உதைத்து எறிந்து விளையாடுவது போல
உதைத்து விளையாடிய போதும்
நாள்பட்ட மௌனத்திற்குப் பிறகு
உன் காலடியில் வந்து
தஞ்சம் புகும் அது
கடல் அலைகள்