கறுப்பினக் கவிஞரான ரீத்தா டோவ் அமெரிக்காவின் பல்கலாச்சார சமூகத்தின்
பண்பாட்டு முகம் எனலாம். அந்தளவுக்கு அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டு
கொண்டாடப்படுபவர் அவர். 1993 முதல் 1995 வரை அமெரிக்க அரசவை கவிஞராக திகழ்ந்தார்.
1987இல் கவிதைக்கான புலிட்சர் விருதை வென்றார். கவிதை மட்டுமல்லாமல் நாடகங்கள்,
நாவல், கட்டுரைகள் என வேறு தளங்களிலும் தாக்கம் செலுத்துகிறார்.
ரீத்தா 1952இல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் பிறந்தார். தற்போது விர்ஜீனியா
பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ளார்.
இவரது முக்கிய கவிதை நூல்கள்
- Sonata Mulattica (2009)
- American Smooth (2004)
- On the Bus with Rosa Parks (1999)
- Mother Love (1995)
கட்டுரைத் தொகுப்பு
The Poet's World (1995)
நாடகம்
The Darker Face of the Earth: A Verse Play in Fourteen Scenes (1994)
நாவல்
Through the Ivory Gate (1992)