காயத்ரி கவிதைகள் (3) - நட.சிவகுமார்




1.
அப்பா

சித்தி

தம்பி பொண்டாட்டி

வீட்டில் மூன்று பேருமுண்டு.     

விடுமுறை நாள்களில்

காய்த்ரியை மடியில் வைத்து கொண்டும்

தோளில் தூக்கிக் கொண்டும்

வீட்டைச் சுற்றி நடக்கின்றேன்.

அழுதால்

பால் கலக்கி

செர்லாக் கலக்கி கொடுக்கிறேன்.

நான் இல்லாத பொழுதுகளில்

யார் செய்வார்கள்

இவைகளை.

சரியாக நான் அறியவுமில்லை

யாரிடமும்

கேட்க விரும்பவுமில்லை.




2


கொஞ்சம்

பேராசிரியராக பணி புரிய

கொஞ்சம்

மனைவிக்கு கணவனாக பணி புரிய

கொஞ்சம்

நண்பர்களொடு வாழவெல்லாம் படித்துவிட்டென்

இன்னும் பழக்கவில்லை

அவளின் மொழியை







3

நாலுநாளாய்

கவிசாகரும்

காயத்ரியும்

ராணித் தோட்டம் பாட்டி வீட்டில்

இது தெரியாத பொம்மை

அழுது கொண்டிருந்தது

வீட்டில்