நான் யோக்கியன் எந்த நிலமுமில்லை யெனக்கு .
வயலுமில்லை ;கலப்பையில்லை ;அறுவடையுமில்லை
நிறைந்த கோதுமை வயலை கனவு காணவென அண்டை வீட்டானிடம் கடன் கேட்கிறேன் .
என் ஆநிரைகள் அதில் மேய்ந்து கொண்டிருக்கும் படிக்கும் தான். .
அவனிடம் ஒப்புதல் வாங்கி விட்டேன் . ஏனெனில்
நான் யோக்கியன்
அவனின் மனையாள் கையில் தூக்கோடு வயலுக்கு வருகிறாள் .
வழிமறித்து
என் சாயலோடு ஒரு குழந்தையை ஈன்று தரும்படிக்கு
கனவு தானே நண்பா……..
ஒப்புதல் வழங்கி விட்டானவன்
எங்கே ? அந்த குழந்தைக்கு நல்ல பெயரிடு
பார்க்கலாம்.
அறுவடை நாளில் தானியங்களை ஏற்றி கொள்ள உன் வண்டியை இரவல் தர முடியுமா .?
முதிர் பயிரை அறுத்து தனிய மூடைகளை எவ்வளவு அழகாய் அடுக்கி வரிசைப்படுத்தியிருக்கிறாய்
நீயேன் ? என்னிடம் பணியாளாய் சேரக் கூடாது.. என் அண்டை வீட்டானே
.
6
எனது காலை ‘’ ஷீ ‘’ விழுங்கி விட்டது
உடைகள் எனது உடலை
சப்பாத்துக்களற்ற கால் தனியே மாடிப்படியேறிக் கொண்டிருகிறது
கை மட்டும் தோசையை கருகாமல் திருப்பி போட்டு கொண்டிருக்கிறது .
உதடுகள் அருகிலிருக்கும் உதடுக்குள் பொருந்தியபடி இருக்கும்
- யோனியின் உதடுகளும் தான் -
நடுவே உடலெங்கே ?
யாருடை ய கரங்களுக்குள்ளாவது
நுழைந்து இறுக தன்னை அணைத்து கொண்டிருக்கும் .
கண்கள் ?
நான்கு திசைகளிலும் யாரேனும் வருகிறார்களாவென பார்ப்பது யார்?
.
7
இறக்கும் நாளுக்கு முந்நாள் இறந்தவர் இரு ஆப்பிள் விதைகளை
விழுங்கி விட்டார்
.
.
‘’ செரிமான கோளாறு
’’- புதைக்கப்பட்டு சரியாய் பதினோரு திவசங்கள்
அவனின் நடு வயிற்றிலிருந்து ;மூடப்பட்ட கல்லறை திறந்து; மண்ணை கீறி ;
ஒரு ஆப்பிள்
செடி .
சரியாய் யேழு ஆண்டுகள் அவன் வாயிருந்தயிடத்தில் விழுகின்றன
.சில ஆப்பிள்கள் .
அவனுக்கு தான் செரிமான கோளாறாயிற்றே
-
சரியாய் 43 ஆண்டுகள் ஆப்பிள்
தோட்டமொன்று ;கல்லறை தோட்டத்தை மூடியபடி
.
எப்போதாவது சில ஆப்பிள்கள் விழுமாவென
எப்போதும் வாயை திறந்தபடியிருக்கும் மண்டையோடுகள்
கீழே.