வினாடி நேர முறிப்பில்
கீழே விழுந்த ரோஜா
வாழ்வின் இறுதி வினாடி
அது அல்ல என அறியாது
அதிர்ச்சியில் உறைந்து போனது ..
சூரியனுக்கும் எனக்கும் இடையே
புகைப்படலமாய் ஒரு மெல்லிய திரை
ரோஜாவின் பயத்தைப் போலவே
கருஞ் சிவப்பாய் உறைந்தது கண்ணீரும்
கேட்கப்படாமல் தெருவில்
இசைக்கப்பட்ட பாடல்
முதலில் என கண்ணீரையும்
பின்னர் எனது விழியையும் அசைக்க,
நான் நிலம் தெளிந்தேன் .
ஓம்
அது ஒரு காட்சி
மரணத்தின் விளிம்பு
என்றாலும் என் கையில் எடுக்கப்பட்ட ரோஜா
இன்னும் கொஞ்ச நேரம் வாழும் எத்தனிப்புகளில்
மெல்லச் சிரிக்கிறது ...
இப்பொழுது வீதியில் கேட்க்கப்படாத இசை
ரோஜாவையும் சேர்த்து உயிர்ப்பிக்கிறது..
இனி ரோஜாவின் இதழிலிருந்து
உருகி ஓடும் பனித்துளி
மற்றுமொரு கவிதை சொல்லும்