செவியன் - கலாப்ரியா





பரமேஸ்வரன்
      சங்கமேஸ்வரனாகத்
      திருவுளம்கொண்டார்
இங்கிதம் தெரிந்த பாம்பு 
      இணையும் உமைபாகம் தொடாது
      வல பாகம் வழியே
      திரு நீலகண்டம் நீங்கிற்று
      பாம்புக்கும் அஃதே போலொரு
      ஆசை
      இணை தேடிச் சேரும் போது
      அன்னை விலகியாயிற்று
      சந்திரனும் கங்கையும்
      சடை சேர்ந்தார்
      அடியார்கள் தரிசனம் வேண்டி
      நந்தியின் காதில் அனுமதி
கேட்கிறார் சீக்கிரம் வாவென்று
    தெரியாமல்
      சிவனார் அழைக்கிறார்
          சீக்கிரம் தீருமா பாம்புக்கலவி
                         
கவிஞர் கலாப்பிரியா சிறு குறிப்பு