கத்திரியில் பெய்த மழை! - குமரகுரு



நேற்று மதியம்
சொட்டி விழவிருந்த
ஒரு முத்தை தட்டி விட்டேன்
கைகுட்டையால் துடைத்தெறிந்து
திரும்பும் போது
தாய் கை பிடித்த
ஒரு பிள்ளையின் அழுக்கற்ற
புன்னகையில்
மீண்டும் நனைந்து
சிரித்தது
என் முகம்…!