கவிஞர் சக்தி ஜோதி சிறு குறிப்பு





சக்தி ஜோதி தேனி மாவட்டத்தில்  அனுமந்தன்பட்டி கிராமத்தில் பிறந்தார். அய்யம்பாளையத்தில் வசிக்கிறார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் . சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். விவசாயம் மற்றும் பெண் கல்வியை மையப்படுத்தி சமூகப் பணியாளராக இயங்கி வருகிறார்.
இவரது கவிதை தொகுதிகள் :

நிலம் புகும் சொற்கள்    - 2008
கடலோடு இசைத்தல்       - 2009
எனக்கான ஆகாயம்     - 2010
காற்றில் மிதக்கும் நீலம்  - 2011
தீ உறங்கும் காடு          - 2012