உமா சக்தியின் இயற்பெயர் உமா பார்வதி. இதழியலில் முதுகலை பட்டம்
பெற்றுள்ளார். இதை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ், திரு.மீடியா வொர்க்ஸ், குமுதம்
ஸ்நேகிதி, டாக்டர் விகடன், பெண்ணே நீ, தினமலர், கல்கி, தேவதை என பல்வேறு ஊடக
நிறுவன்ங்களில் இயங்கி இருக்கிறார். பிரதானமாய் கவிஞர் என்றாலும் உமா சக்தி
சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். உலக சினிமா பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார்.
அமிர்தாவில் இவரது பத்தி வெளியானது. புனைப்பெயரில் கிழக்கு பதிப்பகம் சார்பாக ஒரு
ஆன்மீக நூல் வெளியிட்டார். இவரது படைப்புகள் ஆனந்த விகடன், அவள் விகடன், புதிய
தலைமுறை, குமுதம், ஸ்நேகிதி, கல்கி, பெமினா, தமிழ் ஹிந்து நாளிதழ், காலச்சுவடு,
உயிர்மை, உயிரெழுத்து, புத்தகம் பேசுது, யுகமாயினி, வலசை என பல ஜனரஞ்சக, தீவிர,
இடைநிலை, சிறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கலைஞர் டி.வி, மக்கள் டி.வி, விஜய்
டி.வி, பொதிகை ஆகிய அலைவரிசைகளில் தோன்றியுள்ளார், நிகழ்ச்சிகளை
ஒருங்கிணைத்துள்ளார். ரெயின் போ மற்றும் ஆஹா எப்.எம் களில் ரேடியோ ஜாக்கியாக பணி
செய்துள்ளார்.
இவை உமா சக்தியின்
நூல்கள்
கதொபநிஷதம் – கிழக்கு
பதிப்பகம் (கட்டுரை)
திரைவழி பயணம் –
காலச்சுவடு பதிப்பகம் (கட்டுரை)
வேட்கையின் நிறம் –
உயிர்மை பதிப்பகம் (கவிதை)
பனி பாலைப் பெண் –
புது எழுத்து பதிப்பகம் (கவிதை)
சமகால உலக சினிமா
(கட்டுரை; அச்சில்)
வழியனுப்பிய ரயில்
(அச்சில்)