அன்புச்செல்வன் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப்
பகுதியில் அமைந்துள்ள நாராயணத்தேவன்பட்டியில்
பிறந்தார். தற்போது
மதுரை மாவட்டத்தில் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து
வருகிறார். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவரின்
நேர்முக உதவியாளராகப்
பணிபுரிந்து வருகிறார். இவரது முதல்
கவிதை செம்மலரில் 1996-ல் வெளியானது. பின்னர் சுந்தர சுகன், கனவு, உயிர்
எழுத்து, சதுக்க பூதம், புது
விசை, செம்மலர், சிறை
ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகின. தமுஎச (இப்போதுதான் தமுஎகச) மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டக் கிளைச்
செயலாளராகப் பணியாற்றினார்.