என் கற்பனைகளில்
ஒரு கவிதைக்கான
ஆழத்தை
எட்ட முடிவதில்லை..
என் கருத்துகளின்
முரண்கள்
கட்டுரைகளின்
வரம்பில்
பொருந்தா
புதினங்களூம் நவின
இலக்கியமும்
என் கோப்பை
தேநீரல்ல
இத்துணை புரிந்த
போதிலும்
எந்த எழுத்து
படிக்கினும்
அடி மடியில்
உணர்திடும் தீ ஏனோ