விளையாடத்
தொடங்கினோம்
கண்களை
மூடிக்கொண்டு
ஓன்று, இரண்டு, மூன்று
என பத்து வரை
எண்ணச் சொல்லி
மறைந்து
கொண்டாள்...
தேடுவது போல் தேடி
கண்டுபிடிக்கத்
தொடங்கினேன்.
கதவிடுக்கு
கட்டிலடி
தலையணைக்குள்
திரைசீலைக்குள்
அலமாரியில்
அடுப்படியினில் என
அவள் கால்கொலுசு
வழிகாட்ட
கண்டுபிடித்தேன்
நான்
அவளறியாது
அவளை