நேற்று இரவா?
பகல் புலருகையிலா?
இன்று காலையிலா?
இந்த சம்பவம்
எப்போது நிகழ்ந்தேறி இருக்கும்?
தகவல் தொடர்பு
வளர்ச்சியால்
நம் மூதாதையர்களில்
ஒருவரை
இழந்திட்டோமோ?
அடிபட்ட நேரத்தில்
தன் தாய் இடுப்பை
சிறு குரங்கின் பிஞ்சு விரல்கள்
இறுக்கி பிடிதிருந்திருக்குமோ?
அதன் அதரங்கள்
தாயின் மார்பை கவ்வி கொண்டிருந்திருக்குமோ?
போகும் போது
நடு சாலையில் கிடந்தது...
திரும்புவதற்குள்
யாரோ அதை சக்கரத்தால்
நசுக்கி சாலையோரம்
நகர்த்தி விட்டிருந்தார்...
இந்த சடலத்தை இந்நேரம்
அடையாளம் கண்டிருந்தால்
இந்த குரங்கின் இணை
என்ன பாடு பட்டிருக்கும்?
குரங்குகள் விசித்திரமானவை
அவை நீத்தாரை
எரிப்பதில்லை!
புதைப்பதில்லை!!
கடந்து சென்று கொண்டிருக்கிறன...