நாம் மணமானவர்கள்.
நமது வயிற்றுக்கான அரிசியை
சேகரிக்கும் பொறுப்பு என்னிடம் ...
நமது கூட்டை பராமரிக்கும் பொறுப்பு
உன்னிடம்..
எனது அறிதலுக்குட்படும் தேவையிறாத ஒரு துக்கம் காரணமாக
நான் பணியில் லயித்திருக்கும் வேளையில்
நமது ஆடைகளை அலசவும்,
நமக்காக சமைக்கவும்,
நமது கூட்டை பராமரிக்கவும்
நீ மறந்துவிட்டிருக்கலாம்...
சுதந்திரத்தின் ஒவ்வொரு துளிக்கும்
ஒரு விலையுண்டு என்பதை நானறிவேன்...
நான் கேட்டுக்கொள்வதெல்லாம்,
உனது சுதந்திரத்தின் விலைப் பட்டியல்
எனது மேஜை மேல் ஏன் எனபதைத்தான்...