மேலும் இது நேசம் மட்டுமல்ல - சுதீர் செந்தில்

உனக்கு இன்று முடியவில்லையென படுக்கையறை கதவை சாத்திக்கொண்டாய் இப்போதெல்லாம் எப்பொழுதும் காட்ட விழைகிறேன் உன்னிடம் காமமற்ற பேரன்பை அதை நீ புரிந்து கொண்டாயா என்பது நமக்கு முக்கியமே இல்லை இன்று நான் மிக அதிகமாக உணர்ச்சிவயப்பட்டுள்ளேன் அதுவும் உன்னால்தான் உன்னழகை சுமந்துகொண்டிருப்பது பேராபத்து என்றாலும்கூட நான் உன்னைப் பற்றிக்கொண்டு கவிதைகளை எழுதுகிறேன் ஏன் இவ்வுலகு பெண்கள் வயப்பட்டிருக்கின்றது என்பதை ஆணியவாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலாலது துரதிருஷ்டமின்றி வேறென்ன உன் வயப்பட்ட உலகம் உண்டு என்பதுதான் நியதி புரிகின்றதா உனக்கு ஏன் நீ இத்தனை அழகாக இருக்கின்றாய் மேலும் அத்த¬னை அழகாகவும் உன்னைப் போலவே நானும் ஓர் கவிஞன் உன்னைப் பற்றி எழுத சில வார்த்தைகள் உண்டு என்னிடத்தில் என்றபோதிலும்கூட உன்னைப் பற்றி ஒரு சொல்கூட சொன்னதில்லை சொல்லவும் மாட்டேன் ஒரு பேரழகியிடம் எனக்கு சொல்ல ஒன்றுமேயில்லை என்பதைத் தவிர்த்து சொல்ல ஒன்று உண்டு இந்தத் தருணத்தில் இந்த நகை முரண் குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளேன் நீ இனி அந்தக் கவிதையை வாசிக்கத் துவங்கலாம் அது உனக்காக எழுதப்பட்டது போலவிருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல நீதான்.