சர்வதேச படைப்பிலக்கிய நூல்களுக்கான “மொழி”
விருது வழங்கும் விழா 2014.
தோப்பு இலக்கிய வட்டம் சிறந்த இலக்கிய
நூல்களுக்கான மொழி விருது வழங்கும் விழா ஒன்றினை இவ்வாண்டு இறுதியில் நடாத்த
ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது.
பின்வரும் நான்கு பிரிவுகளில் நூல்கள்
வகைப்படுத்தப்பட்டு தகைமை பெறும் ஒவ்வொரு வகைக்கும் பரிசளிக்கப்படும்.
1.
நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை
2.
கவிதை
3.
கட்டுரை, பத்திகள், ஆய்வுகள்
4.
மொழி பெயர்ப்புக்கள்: சிங்கள, ஆங்கில மூல நூல்களை தமிழ் மொழியில் பெயர்த்து எழுதப்பட்ட நூல்கள்
விதிகளும் கட்டுப்பாடுகளும்
·
உலகின் எப்பாகத்திலும் உள்ள எழுத்தாளர்கள் பங்குபற்றலாம்
(தோப்பு இலக்கிய வட்ட நிருவாக உறுப்பினர்கள் தவிர)
·
2012 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2014 ஜூன் இறுதி வரையான காலப் பகுதியினுள் வெளியான முதல் பதிப்பு
நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்.
·
நூல் தெரிவுகளுக்கு என்றே நியமிக்கப்பட்ட சுதந்திர நுட்ப
தெரிவுக்குழுவின் (ITEC) முடிவையே இறுதியானதாகக் கொண்டு பரிசில்களுக்கு
பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் விபரங்களை தோப்பு இலக்கிய வட்டம் வெளியிடும்.
·
மேலே குறிப்பிடப்பட்ட காலங்களுக்குள் ஒரு எழுத்தாளர் மேலே
குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை
வெளியிட்டிருப்பின் அவைகளில் மும்மூன்று பிரதிகளையும் அனுப்ப முடியும். எப்படியாயினும்
அப்பிரிவில் தகைமை பெறும் ஒரு நூலுக்கு மாத்திரமே பரிசளிக்கப்படும். அனால்
வெவ்வேறு பிரிவுகளில் படைப்பாக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு பிரிவுக்கும் தகுதி
பெறும்.
·
பரிசில் பணத்தொகை இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.
·
பரிசில்கள் : (ஒவ்வொரு பிரிவிலும்)
1.
முதலாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய் 20,000.
2.
இரண்டாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய் 15,000.
3.
மூன்றாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய் 10,000.
4.
அடுத்துவரும் முதல் மூன்று நூல்களுக்கு இறுதிச்சுற்றுக்கு
தகைமை பெற்ற சான்றிதழ்.
·
இலங்கைக்கு வெளியே வதியும் தகைமை பெற்ற நூலாசிரியர்களுக்கு
விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும். பயணத்தின்
பேரில் ஏற்படும் எவ்வித செலவுகளுக்கும் தோப்பு இலக்கிய வட்டம் பொறுப்பு
ஏற்கமாட்டாது. அன்றில் இலங்கையில் வதியும் யாராகினும் அவரின் பிரதிநிதியாக
அதிகாரம் அளிக்கும் பட்சத்தில் அவர் நிகழ்வில் கலந்துகொண்டு பரில்களை பெற
தகுதியுண்டு. அதுவுமில்லை எனில் கூரியர் சேவை மூலம் பரிசில்கள் தங்கள் வதியும்
முகவரிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.
·
நூல்கள் யாவும் The Chairman “ Thoppu Ilakkiya Vaddam”, No: 163, Town Hall Road, Kalmunai -07, Sri Lanka. எனும் முகவரிக்கு 20. 10. 2014 திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக அஞ்சலில் அனுப்பி
வைக்கப்படல் வேண்டும்.
·
நூல்கள் வந்தடைந்தது பற்றியும், தகைமை பெற்ற நூல்கள்
பற்றியும் அனுப்பியவர்களுக்கு மின் அஞ்சலில் அல்லது தபால் மூலம் அறிவிக்கப்படும்.
விழா ஏற்பாட்டுக்குழு
தோப்பு இலக்கிய வட்டம்
கல்முனை.
16.07.2014
_________________________________________________________________________________
Postal Address : # 163, Town Hall Road,
Kalmunai. 07, Sri Lanka.
Tele:
Catheer : (0094) 77 313 8 109, Anar : (0094) 77 254 6 569, Nafeel : (0094) 71 491 4 153