நகுலன்: சில கேள்விகளும் பதில்களும் (8) - லீனா மணிமேகலை மற்றும் வெளி ரங்கராஜன்

நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் இரண்டு கீழே:


1.      இன்மை: பிற ஆண் கவிஞர்களிடம் உள்ள ஒரு ஆண்-மைய தன்மையை நகுலனிடமும் பார்க்கிறீர்களா? நகுலனில் வரும் ஆண் எப்படிப் பட்டவன்?

லீனா மணிமேகலை: பிரதி வழி நகுலன் ஒரு அப்பட்டமான ஆண்.  இலக்கியமாகவோ  அரசியலாகவோ, இருப்பாகவோ  தடம் பற்றிக் கொள்ள எனக்கு அவரிடம் எதுவும் தட்டுப்பட வில்லை. சுசீலா என்ற சொல் வரும்போதெல்லாம், ஏதோ செல்ல நாயை அழைக்கும் ஓசை தான் கேட்கிறது. அதற்கு அநுபூதி, அரூபம் என்றெல்லாம் பெயரிடுவது சிலாகிப்பது சுத்த பேத்தல்.




இன்மை: நகுலன் கவிதைகளில் உள்ள சுயம் சார்ந்த அடையாளமின்மை ஒரு வைதீக பிராமணிய சிக்கலா அல்லது நவீன மனதின் ஆதார பிரச்சனையா?


வெளிரங்கராஜன்: சுயம் சார்ந்த அடையாளமின்மை என்பது அடிப்படையில் ஒரு நவீன மனத்தின் போக்காகவே நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட போக்கை பல கவிஞர்களிடம் பார்க்க முடியும். “எனக்கு யாரும் இல்லை நான் கூட” என்கிற மனநிலையை வைதீக பிராம்மணீய சிக்கல் என்று நாம் ஒருபோதும் பார்க்க முடியாது.