தரிசனம் - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி



இந்த மாலை 
நேரத்தில் 
நான் மட்டும் 
தனியே 
கோவிலுக்கு 
சென்றுவிட்டு 
வீடு திரும்புகையில் 
இன்னமும் 
உன்னுடன் 
கைபிடித்து 
நடந்து கொண்டு 
வேண்டிய 
தரிசனங்களின் 
காட்சி 
ஒவ்வொன்றாக 
மீள்கிறது; 
சீரான வரிசையில் 
உள்ளே நுழையும் பொழுது 
சட்டென 
என் கைகளை 
உன் கையுடன் சேர்த்து 
இருவரும் ஒன்றாக 
வலது கால் எடுத்து வைத்து 
சென்றது; 
சாமி கும்பிட்டபின் 
கற்பூர ஆரத்தியினை 
நீ தொட்டு 
வணங்கியது; 
எல்லோரும் 
கண்ணாடி பார்த்து 
பொட்டு வைக்கையில் 
அதை பார்க்காமலே 
பொட்டு வைக்க சொல்லி தந்தது; 
நான் தான் வைப்பேன் 
என என் நெற்றியில் 
நீ வைத்து விட்ட 
சந்தனத்தின் ஈரம் 
திருநீறின் வாசம் 
இன்னமும் 
அப்படியே இருப்பதுபோல 
இருக்கிறது; 
மொத்தமாக 
எல்லாமும் 
என் இதழ்களின் 
ஓரத்தில் புன்னகையாய் 
மலர்ந்து பின் 
உதிர்க்க தொடங்கியது 
ஞாபக பூக்களை.