உருமாறும் குதிரை - அன்பரசு ஷண்முகம்




மெல்லிய ஸ்பரிசங்கள்
குறும்புப் பார்வைகள்
தள்ளிவிட்டுக் கொண்டு
எதிரெதிரே உட்கார்ந்து
காய்கள் நகர்த்த
தயாராக இருக்கிறோம்
குதிரையை ஒரு கட்டம்
நகர்த்தி சிறு புன்னகை
பரிசளிக்கிறாய்.
பெரும்வெளியை கடக்கும ;
வேட்கையுடன் குதிரையாகி
போனோம்.
மாறி மாறி குதிரைகள்
சென்றுகொண்டேயிருந்தன.