1. கடவுளர் பிரார்த்தனை
செவ்வகப் பெட்டிகள் நிரம்பிய
குளிரூட்டப்பட்ட நரகங்களின் வாயில்களில்
காத்து நிற்கும் சிறுதெய்வங்கள்
தமக்கான படையலை எதிர்நோக்கி
துளிர்க்குமுன் உதிரும் இலைகளோ
மின்கம்பியினில் கருகிய பறவைகளோ
சிலுவையினில் அறையப்படும் புனிதர்களோ
பாதிப்பின்றி யாவற்றையும் தாண்டிப்போக
ஒரு குப்பி மது போதுமானதாய்
இருக்கிறது
துளிர்க்குமுன் உதிரும் இலைகளோ
மின்கம்பியினில் கருகிய பறவைகளோ
சிலுவையினில் அறையப்படும் புனிதர்களோ
பாதிப்பின்றி யாவற்றையும் தாண்டிப்போக
ஒரு குப்பி மது போதுமானதாய்
இருக்கிறது
உணர்வுச்சட்டை உதிர்த்த சர்ப்பங்களுக்கு
தூக்கிலிட்டு மரித்துப்போன
அப்ரோடைட்டுகளின் வருகை
தினத்தின் அதியற்புத கொண்டாட்டம்
ஏசியின் ரீங்காரமும்
ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஓலங்களும்
செவிதனில் பாய்ந்திடும் இன்பத்தேன்
என்றபோதும்
தனக்கான மரணமும் ஒருநாள்
வந்தே தீரும் என்பதை
அறிந்து வைத்திருக்கும் சிறு
தெய்வங்கள் பிரார்த்தித்தபடியே இருக்கின்றன
தான்சார் எவரும்
தன் உடல் வேண்டி
மற்றொரு சிறு தெய்வத்திடம்
மண்டியிடக் கூடாதென
தூக்கிலிட்டு மரித்துப்போன
அப்ரோடைட்டுகளின் வருகை
தினத்தின் அதியற்புத கொண்டாட்டம்
ஏசியின் ரீங்காரமும்
ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஓலங்களும்
செவிதனில் பாய்ந்திடும் இன்பத்தேன்
என்றபோதும்
தனக்கான மரணமும் ஒருநாள்
வந்தே தீரும் என்பதை
அறிந்து வைத்திருக்கும் சிறு
தெய்வங்கள் பிரார்த்தித்தபடியே இருக்கின்றன
தான்சார் எவரும்
தன் உடல் வேண்டி
மற்றொரு சிறு தெய்வத்திடம்
மண்டியிடக் கூடாதென
2. அந்நியன்
தனக்கான நியாயங்களைத் தானே
செதுக்கிக் கொள்ளும் ஒருவனை
நேற்று கீழ்திசையில் சந்தித்தேன்
உங்களில் ஒருவன் என்றானாலும்
அவன் ஒருபோதும்
உங்களில் ஒருவனாய் இருந்ததில்லை
பாறைகளும் படுகைகளும் பெயர்த்தெடுத்து
பொன்னாய் மாற்றிடும் மிதாசுகளின் மத்தியில்
அவன் பறவைகளோடு உரையாடுவதும்
நெடுஞ்சாலை மரங்களுக்கு கண்ணீர் உகுப்பதுவும்
இடுகாடுகளில் வானம் பார்த்துக் கிடப்பதும்
அதிகாரத்தின் புட்டத்தின் மீது சிறுநீர் கழிப்பதும்
சற்றே அபாயகரமானதுதான்
தோட்டாக்கள் தாங்கி நிற்கும்
துப்பாக்கிகள் எல்லாம்
அவனைக் குறிவைப்பது என்பதும்
எதேச்சையானது அல்ல
அவனை அலைக்கழிப்பதுதான் என்ன
பல்லிகளும் பாச்சைகளும் ஊர்ந்து திரியும்
வழவழப்பான பீங்கான் கோப்பைகளின் மீதமர்ந்து
நிம்மதியாய் மலங்கழிக்க முடிவதில்லை
எனப் புலம்புகிறவனின் கையிலிருக்கும்
ஒற்றை முள் கடிகாரத்தினுள்
முயங்கிக் கிடக்கிறது காலம்
நிர்வாணமாய் கவலைகள் தொலைத்து
தெருக்களில் அலைபவனைப்
பைத்தியம் என்பவர்களிடம் சொல்ல
அவனிடம் ஒற்றை வரி மட்டுமே இருக்கிறது
அது தான் மட்டும் கிடையாது
செதுக்கிக் கொள்ளும் ஒருவனை
நேற்று கீழ்திசையில் சந்தித்தேன்
உங்களில் ஒருவன் என்றானாலும்
அவன் ஒருபோதும்
உங்களில் ஒருவனாய் இருந்ததில்லை
பாறைகளும் படுகைகளும் பெயர்த்தெடுத்து
பொன்னாய் மாற்றிடும் மிதாசுகளின் மத்தியில்
அவன் பறவைகளோடு உரையாடுவதும்
நெடுஞ்சாலை மரங்களுக்கு கண்ணீர் உகுப்பதுவும்
இடுகாடுகளில் வானம் பார்த்துக் கிடப்பதும்
அதிகாரத்தின் புட்டத்தின் மீது சிறுநீர் கழிப்பதும்
சற்றே அபாயகரமானதுதான்
தோட்டாக்கள் தாங்கி நிற்கும்
துப்பாக்கிகள் எல்லாம்
அவனைக் குறிவைப்பது என்பதும்
எதேச்சையானது அல்ல
அவனை அலைக்கழிப்பதுதான் என்ன
பல்லிகளும் பாச்சைகளும் ஊர்ந்து திரியும்
வழவழப்பான பீங்கான் கோப்பைகளின் மீதமர்ந்து
நிம்மதியாய் மலங்கழிக்க முடிவதில்லை
எனப் புலம்புகிறவனின் கையிலிருக்கும்
ஒற்றை முள் கடிகாரத்தினுள்
முயங்கிக் கிடக்கிறது காலம்
நிர்வாணமாய் கவலைகள் தொலைத்து
தெருக்களில் அலைபவனைப்
பைத்தியம் என்பவர்களிடம் சொல்ல
அவனிடம் ஒற்றை வரி மட்டுமே இருக்கிறது
அது தான் மட்டும் கிடையாது
3. தீர்மானம்
ஒரு தீர்மானம்
மிகச் சரியானதும் கூட
எலும்பாலான பீடங்களில்
அவர்கள் வீற்றிருக்கிறார்கள்
அவர்கள் வீற்றிருக்கிறார்கள்
நெடிய மரம் வெடித்துப் பிளக்கிறது
சிவப்புநிறச் சாறு குளமெனத் தேங்க
குதூகலமாய்
நீராடுகிறார்கள்
கல்லறைகள் ஒன்றன் பின் ஒன்றாக அகழ்ந்து
புதிய உடல்களுக்கென புரண்டு படுக்க
பூனைகள் கூரிய
நகங்களோடு காத்திருக்கின்றன
ஒன்பது உயிர்கள்
இல்லாமல் போனதற்காய்
நன்றி சொல்லும் பிணங்கள்
நன்றி சொல்லும் பிணங்கள்
சாம்பல் நிறப்பூக்கள் காலடியில் கசங்க
ரவுலட் ஆட்டம் துவங்குகிறது
தனக்கான நிலைதேடி
உருளும் பந்து
சிறிய குறுகிய முலைகளெனில்
கைகளைத் தரையிலிருத்தி இயங்கும் சிரமமிருக்காது
பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் கடவுள்
தன் நடுவிரலை
உயர்த்துகிறார்
தேர்ந்தெடுக்கப்பட்டவள் தரையில் வீழ்த்தப்படுகிறாள்
சுற்றியிருப்பவர்கள் ஓலமிட
சுற்றியிருப்பவர்கள் ஓலமிட
வெளியெங்கும் பொங்கி வழியும் இசை
விரைந்தியங்கி எழுபவனின்
புட்டத்திலிருந்து உதிரும் கண்கள்
பொறாமையைத் தேக்கி நிற்க
மீண்டும் சுழலத் தொடங்குகிறது
ரவுலட் பந்து
ஒரு இனத்தைக் அழித்தொழிப்பது
என்றானபின்
நிலங்களின் ரேகைகளை அழிப்பதைக் காட்டிலும்
துவக்குகளையும் ஷெல்களையும் காட்டிலும்
அவர்களது பெண்களை
வண்புணர்ந்து கொல்வதென்பது
எத்தனை எளிமையானது