பூனைத்தனம் - பா. சரவணன்




ஊடுருவிப் பார்க்கும்
பூனையின் கண்கள்
மனதை எங்கோ இழுத்துச்சென்று
பிறாண்டி
ரத்தக் கீறல்களோடு வீசிவிடுகிறது
நினைவு திரும்பி
மீண்டும் பார்க்கும்போது
ஒன்றும் அறியாததுபோல்
முகம் திருப்பிக்கொண்டு
அங்கேயே அமர்ந்திருக்கிறது பூனை