காதல் அமானுஷ்யமானது - பா.சரவணன்





நினைவில்லாத இடத்தில்
அவளை நினைத்து
அலைந்துகொண்டிருந்தேன்
நெடுங்காலம்
சோர்ந்து ஒரு மரத்தின் அடியில்
அமர்ந்து தூங்கிப்போன என்னை
எழுப்பினாள் அவள் மூச்சுக் காற்றால்
கண்ணீரைத் துடைத்து என்னை
உச்சி மோந்த அவள்
ஆச்சரியமாய் கேட்டாள்
நீ மட்டும் எப்படி
இன்னும் இளமையாய் இருக்கின்றாய்என்று
கவாபத்தா படித்ததில்லையா நீ
என்றேன்
திருதிருவென விழித்தவளிடம்
அகால மரணம் அடைந்தவர்கள்
அதே வயதிலேயே இருப்பார்கள்என்றேன்
கலகலவென சிரித்தவளை அணைத்தபடி
பறந்து
மலைக்குப் பின் மறைந்தோம்
எங்கும் எதிரொலித்தது
எங்கள் சிரிப்பு