ரகசியத் தோட்டம் - ரீத்தா டோவ்
கையில்
வெண்முயல்களுடன் நீ வந்த போது
நலமில்லாமல் பழைய
காகிதங்களாலான என் படுக்கையில் கிடந்தேன்,
அப்போது புறாக்கள்
மேலே நோக்கி சிதறிப் பறந்தன், தம் தாயைத் தேடி.
கற்சுமைகளுக்கு கீழ்
பெருமூச்சு விட்டன நத்தைகள்.
இப்போது நம்மிடையே
வளர்கிறது உன் நாவு செவ்வரிக் கீரையைப் போல்
நம் காம முனகல்கள்
காரணமாய் தன் கூட்டில் இருந்தபடி முட்டைக்கோஸ் கறுக்கிறது
காலிபிளவர் செடி தன்
வெளிறிய பருத்த பிள்ளைகளை எண்ணிப் பார்த்து
சமுத்திரம் போன்ற நீல
ஒளியில் பச்சை கலந்த வெள்ளையாய் மாறுகிறது
தேநீர்ப்பைகளின்
வாடையில் தலைசுற்றியபடி சுகமில்லாமல் போனேன்
அப்போது நீ வந்தாய்
தக்காளிகளுடன், ஒரு அழகிய கவிதையுடன்.
என் மார்புகளில்
சாக்கட்டி தடங்களை தந்து போகும் சுண்ணாம்பு பாறை முகட்டால்