நரன் 1981இல் விருதுநகரில் பிறந்தார். புகைப்படம் மற்றும் ஓவியங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் .
முதல் தொகுப்பான உப்பு நீர் 2010-ல் வெளியானது. இரண்டாவது தொகுப்பான ஏழாம்
நூற்றாண்டின் குதிரைகள் 2014 -ல் வெளியானது. கட்டுமான
நிறுவனமொன்றில் (இன் ஃப்ரா) பணி செய்து வருகிறார். நரனின் கவிதைகளில் ஜென் கவிதைகளின் தாக்கம் வலுவாக இருக்கும். வலுவான குறியீடுகளைக் கொண்ட மொழி இவருடையது.